ஊர்வலம்
செஞ்சி : செஞ்சி தாலுகா முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் அமைப்பின் சார்பில் உலக தண்டுவட தின விழிப்புணர்வு பிரசாரம் செஞ்சி கூட்ரோட்டில் நடந்தது. வட்டார பொறுப்பளர் சந்தானம் வரவேற்றார். நிர்வாகிகள் அண்ணாமலை, முருகன், முனுசாமி முன்னிலை வகித்தனர்.போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அப்பண்டைராஜ், கன்னிகா டிரஸ்ட் ரமேஷ்பாபு ஆகியோர் விளக்க உரையாற்றினர். நிர்வாகிகள் ஏழுமலை, நெடுஞ்செழியன், மஞ்சுளா, சவுந்தரராஜன் மற்றும் போக்குவரத்து போலீசார் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், பொது மக்களுக்கு தண்டுவடத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.