உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கொள்ளுமேடு தார் சாலையை சீரமைக்கா விட்டால் போராட்டம்; பொதுமக்கள் அறிவிப்பு

கொள்ளுமேடு தார் சாலையை சீரமைக்கா விட்டால் போராட்டம்; பொதுமக்கள் அறிவிப்பு

மரக்காணம்: மரக்காணம் அடுத்த கொள்ளுமேடு கிராமத்திற்குச் செல்லும் தார் சாலையில் ஜல்லிகள் பெயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.மரக்காணம் அடுத்த கந்தாடு ஊராட்சிக்குட்பட்ட கொள்ளுமேடு கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. திண்டிவனம் - மரக்காணம் செல்லும் சாலையில் இருந்து கொள்ளுமேடு கிராமத்திற்குச் செல்லும் 1 கி.மீ., துார தார்சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது.மழைக் காலங்களில் இந்த தார்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியது. சாலையை சீரமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கந்தாடு ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் கூறியும் நடவடிக்கை இல்லை.இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக தார்சாலையில் ஜல்லிகள் அனைத்தும் பெயர்ந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மேலும் இந்த வழியாக நடந்து செல்பவர்கள் கால்களையும், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களின் டயர்களை ஜல்லிகற்கள் பதம்பார்த்து விடுகிறது.இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தார் சாலை போடா விட்டால் போராட்டம் நடத்தப்போவதாக அப்பபகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ