மேலும் செய்திகள்
போலீசாரை கண்டித்து வி.சி.க.,வினர் ஆர்ப்பாட்டம்
02-Feb-2025
கண்டமங்கலம் : கண்டமங்கலம் அடுத்த தொந்திரெட்டிப்பாளையம் ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஜெ., பிறந்த நாளையொட்டி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ராமதாஸ் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பா வரவேற்றார். வார்டு உறுப்பினர் அனிதா, கிளை இளைஞர் பாசறை பொருளாளர் யுவராஜ் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய பேரவை இணைச் செயலாளர் சவுந்தர்ராஜன், தனது சொந்த செலவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், எழுதுபொருட்கள், இனிப்பு மற்றும் பள்ளிக்கு உலக உருண்டை, நாற்காலி, கல்வி உபகரணங்கள் வழங்கினார். சிவா, ஜெயச்சந்திரன், ஆதிமூலம், புஷ்பராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆசிரியர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
02-Feb-2025