மேலும் செய்திகள்
குறைதீர் கூட்டம்
11-Mar-2025
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 578 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமை தாங்கி, மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை செய்து அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடி கவனம் எடுத்து குறித்த காலத்தில் தீர்வு வழங்கிட வேண்டுமென தெரிவித்தார். இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டு மனை பட்டா கோருதல், தொழில் துவங்க கடனுதவி கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 578 மனுக்கள் பெறப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பத்மஜா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முகுந்தன், மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
11-Mar-2025