உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அபிராமேஸ்வரருக்கு ரத உற்சவம்

அபிராமேஸ்வரருக்கு ரத உற்சவம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே திருவாமாத்துாரில் உள்ள முத்தாம்பிகை உடனுரை அபிராமேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரத்தை யொட்டி ரத உற்சவம் நடந்தது.அபிராமேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த 10ம் தேதி யாகசாலை பூஜையோடும், 15ம் தேதி கொடியேற்றத்தோடு துவங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சுவாமி சந்திரபிரபை, பூதவாகனம், நாகவாகனம், ரிஷப வாகனம், யானை, கபிலாய வாகனங்களில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, நேற்று காலை 8.00 மணிக்கு சுவாமி கோவிலிலிருந்து தேரில் எழுந்தருளி செல்லும் நிகழ்ச்சி நடந்தது. மாடவீதிகள் வழியாக சென்ற தேரை பக்தர்கள், பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். காலை 9.00 மணிக்கு ரத உற்சவ தேர் மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இன்று (24ம் தேதி) காலை 9.00 மணிக்கு நடராஜர் புறப்பாடு, மாலை 5.00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, கொடி இறக்குதல் பஞ்சமூர்த்தி விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்