| ADDED : ஜூலை 30, 2024 06:10 AM
வானுார்: புதுச்சேரி-திண்டிவனம் புறவழிச்சாலையில் இடைப்பட்ட பகுதியில் உள்ள கிராமங்களில் தனியார் பஸ்கள் நிறுத்தாமல் செல்வதால் பொது மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச்சால 38 கி.மீ., துாரம் உள்ளது. இந்த சாலையின் இடைப்பட்ட பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. புதுச்சேரி - திண்டிவனம் மார்க்கத்தில் ஏராளமான தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் அனைத்து கிராமங்களிலும் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வது வழக்கம்.இதன் மூலம் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்கள் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, ராவுத்தன்குப்பம், பாப்பாஞ்சாவடி, புளிச்சப்பள்ளம், ஆண்டியார்ப்பாளையம், ஒழிந்தியம்பட்டு கிராம மக்கள் பயனடைகின்றனர்.தற்போது, திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும் தனியார் பஸ்கள், குறுகிய நேரம் எடுப்பதால், ராவுத்தன்குப்பம், பாப்பாஞ்சாவடியில் நிறுத்தி பயணிகளை ஏற்றாமல் செல்கின்றனர். இதனால், இந்த கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரகின்றனர்.இது குறித்து அந்தந்த பகுதி ஊராட்சி தலைவர்கள் திண்டிவனம் ஆர்.டி.ஓ., விற்கு புகார் தெரிவித்துள்ளனர். அவர்களும், தனியார் பஸ் டிரைவர்களை எச்சரிக்கின்றனர். அந்த நேரத்திற்கு மட்டுமே தனியார் பஸ்கள், முக்கிய ஊர்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றுவது வழக்கமாக உள்ளது. அதன் பிற்கு கண்டு கொள்வதில்லை. எனவே முக்கிய ஊர்களில் நிறுத்தாமல் செல்லும் தனியார் பஸ்கள் மீது ஆர்.டி.ஓ., கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.