உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காரையில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை 

காரையில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை 

செஞ்சி : செஞ்சி ஒன்றியம் காரை கிராம பொது மக்கள் செஞ்சி தாசில்தார் ஏழுமலையிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.அதில் காரை பஸ் நிறுத்தத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்கு நிழற்குடை அமைக்க வேண்டும், பஸ் நிறுத்தத்தில் இருந்து பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கு செல்லும் பிரதான சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சிமென்ட் சாலை அமைக்க வேண்டும், அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் கிராமத்தின் மைய பகுதியில் நியாயவிலை கடை கட்ட வேண்டும்.கடந்த 2022 ஆம் கிராம ஊராட்சியில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தின் அடிப்படையில் வைக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர் வெண்கல சிலையை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என அந்த மனுவில் கேட்டு கொண்டுள்ளனர். இதே போன்ற மனுவை செஞ்சி பி.டி.ஓ., அலுவலகத்திலும் கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி