காணை ஒன்றிய குழு கூட்டத்தில் 10 ஊராட்சிகளை பிரிக்க தீர்மானம்
விழுப்புரம், ;காணை ஒன்றியத்தில் உள்ள 10 ஊராட்சிகளை இரண்டாக பிரிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.காணை ஒன்றிய அவசரக் கூட்டம், சேர்மன் கலைச்செல்வி தலைமையில் நடந்தது. துணை சேர்மன் வீரராகவன், பி.டி.ஓ.,க்கள் சிவக்குமார், ஜூலியானா முன்னிலை வகித்தனர். கூடுதல் பி.டி.ஓ., அசோக்குமார் தீர்மானங்களை வாசித்தார்.கூட்டத்தில், கஞ்சனுார் பகுதியில் புதிய ஒன்றியம் அமைக்க, காணை ஒன்றியத்தில் இருந்து அனுமந்தபுரம் (அடங்குணம்), கல்பட்டு ( நத்தமேடு), ஆரியூர் ( சாணிமேடு) , கருவாட்சி (புதுகருவாட்சி), கெடார் (செல்லங்குப்பம்), மாம்பழப்பட்டு, (ஒட்டன்காடுவெட்டி) பனமலை (பனமலைப்பேட்டை), பெரும்பாக்கம் (வெங்கடேசபுரம்), கஞ்சனுார் (கொரலுார்), அதனுார் (தர்மாபுரி) ஆகிய 10 ஊராட்சிகளை பிரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.கூட்டத்தில், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.