உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கள்ளச்சாராயத்தை ஒழிக்க வருவாய்த் துறை ஆலோசனை

கள்ளச்சாராயத்தை ஒழிக்க வருவாய்த் துறை ஆலோசனை

விழுப்புரம் : விழுப்புரம் வருவாய் கோட்டத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஆர்.டி.ஓ., காஜா சாகுல்அமீது தலைமை தாங்கினார். தாசில்தார்கள் வசந்தகிருஷ்ணன் கிருஷ்ணதாஸ், ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், விழுப்புரம், விக்கிரவாண்டி, கண்டாச்சிபுரம், திருவெண்ணெய்நல்லுார், வானுார் பகுதிகளில், கள்ளச்சாராயம் விற்பனை, காய்ச்சுதல், கடத்தல் சம்பவங்கள் நடந்தால் அதை கண்காணிக்கும் பணிகளில் வி.ஏ.ஓ., ஆசிரியர், அங்கன்வாடி பணியாளர், கிராம உதவியாளர் ஆகியோர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு, கண்காணித்து தடுக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.வி.ஏ.ஓ.,க்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்