உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சமரச சுத்த சன்மார்க்க சத்ய சங்க முப்பெரும் விழா

சமரச சுத்த சன்மார்க்க சத்ய சங்க முப்பெரும் விழா

செஞ்சி: செஞ்சி நகர சமரச சுத்த சன்மார்க்க சத்ய சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.செஞ்சி நகர சமரச சுத்த சன்மார்க்க சத்ய சங்கம், புதுச்சேரி வள்ளலார் கல்வி அறக்கட்டளை சார்பில் தாய், தந்தையை இழந்த ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்குதல், வள்ளலாரின் திருவருட்பா போதித்தல், சன்மார்க்க தொண்டர்களை சிறப்பித்தல் என முப்ருவிழா செஞ்சியில் நடந்தது.நகர செயலாளர் சம்பத் தலைமை தாங்கனார். முத்துவேல், கார்த்திகேயன், பாண்டியன், கண்ணதாசன் முன்னிலை வகித்தனர்.காலை 7:00 மணிக்கு அகவல் வழிபாடு நடந்தது. 8:30 மணிக்கு சன்மார்க்க கொடியை சங்கத் தலைவர் தணிகாசலம் ஏற்றினார். புதுச்சேரி வள்ளலார் கல்வி அறக்கட்டளைத் தலைவர் குமாரசாமி வரவேற்றார். செயலர் சீனுவாசன் நோக்க உரையாற்றினார்.தொடர்ந்து சன்மார்க்க சொற்பொழிவும், வடலுார் சேவை மைய நிறுவனர் சீனுவாசனின் திருவருட்பா இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது.அமைச்சர் மஸ்தான் சிறப்புரை நிகழ்த்தி திருவருட்பா குறித்த பேச்சு, பாட்டு, கட்டுரை, ஓவிய போட்டியில் பங்கேற்ற 200 மாணவர்களை பாராட்டி வள்ளலாரின் ஜீவகாருன்ய ஒழுக்க நுாலை வழங்கினார்.செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார் மற்றும் சன்மார்க்க சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ