உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சசிகலா ஆதரவு போஸ்டர் திண்டிவனத்தில் பரபரப்பு

சசிகலா ஆதரவு போஸ்டர் திண்டிவனத்தில் பரபரப்பு

அரசியலை விட்டு ஒதுங்கி இருந்த நிலையில், ஜெ.,வின் தோழி சசிகலா திடீரென்று அரசியலில் என்னுடைய என்ட்ரி தொடங்கி விட்டது என அதிரடியாக அறிவித்தார். வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜெ.,வின் அட்சியை நிச்சயமாக அமைப்போம். தனிப்பெரும் கட்சியாக இருப்போம். தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.இதன் தொடர்ச்சியாக ஒரு சில மாவட்டங்களில் சசிகலாவிற்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இதேபோல் திண்டிவனம் பழைய பஸ் நிலையம் பகுதிகளில் சசிகலா ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.அதில், 'புரட்சித்தாய் சின்னம்மா அவர்களின் தலைமையேற்போம். 2026 சட்டசபை தேர்தலில் வென்று காட்வோம்' என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. வாசகத்தின் கீழே முன்னாள் அமைச்சர் ஆனந்தன் உள்ளிட்ட நிர்வாகிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இதில் திண்டிவனம் பகுதியை சேர்ந்த நிர்வாகிகள் பெயர் இல்லை.திண்டிவனம் பகுதியின் நிர்வாகிகள் ஒருவர் பெயர் கூட இடம் பெறாமல் இருப்பதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஒரு வேளை சசிகலா விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது திண்டிவனம் பகுதி நிர்வாகிகள் பெயர் இடம் பெறுமா என தெரியவில்லை. இந்த போஸ்டரால் அ.தி.மு.க.,வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ