உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்

பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு, தலைமை ஆசிரியர் பக்தவச்சலம் தலைமை தாங்கினார். பேரூராட்சி முன்னாள் சேர்மன் குமாரசாமி, நியமன குழு தலைவர் சர்க்கார் பாபு முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் வரவேற்றார்.பள்ளி மேலாண்மைக் குழு தலைவராக சுந்தரி, துணைத் தலைவராக லட்சுமணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உறுதிமொழியேற்றனர். பள்ளி ஆசிரியர்கள் டெய்சிராணி, ஜெயக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ