| ADDED : ஜூலை 12, 2024 05:11 AM
விக்கிரவாண்டி: விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ரத்த வங்கியில் இருந்து அரிய வகை ரத்தம் சிகிச்சைக்காக ரயில் மூலம் சென்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.சென்னை, மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கு, ரத்த வகைகளில் மிகவும் அரிதான, லட்சத்தில் ஒருவருக்கு இருக்கும் 'பாம்பே ஓ ஹெச் பாசிடிவ்' வகை ரத்தம் தேவைப்பட்டது.இந்த அரிய வகை ரத்தம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ரத்த வங்கியில் இருப்பது தெரிய வந்தது.அதை, மனிதம் காப்போம் குழு நிறுவனர் சந்துருகுமார் மற்றும் பிப்டூ அமைப்புடன் ஒருங்கிணைந்து ரத்த வங்கி செவிலியர் சத்யநாராயணனிடமிருந்து ரத்தத்தை பாதுகாப்பாக பெட்டியில் வைத்து நேற்று முன்தினம் மாலை குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை மியாட் மருத்துவமனைக்கு கொண்டு சென்று, நோயாளிக்கு செலுத்தப்பட்டது.சரியான நேரத்தில் உதவிய, மனிதம் காப்போம் குழு நிறுவனர் சந்துருகுமாருக்கு, மியாட் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் மற்றும் நோயாளியின் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.