மேலும் செய்திகள்
பாடலீஸ்வரர் கோவிலில் சனி மகா பிரதோஷம்
01-Sep-2024
ஆடிப்பூர விழா
09-Aug-2024
விழுப்புரம்: விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி சுவாமிக்கு பிரதோஷ பூஜை நடந்தது.அதனையொட்டி, நந்தீஸ்வரருக்கு நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், 5:00 மணிக்கு நந்தி பகவான் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 5:30 மணிக்கு நந்தி சுவாமிக்கும், மூலவருக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது.மாலை 6:00 மணிக்கு பிரதோஷ நாயகர் நந்தி சுவாமி, கோவில் உட்பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்தனர்.இதேபோன்று, கீழ்பெரும்பாக்கம் பசுபதீஸ்வரர் கோவிலில் சனி மகா பிரதோஷத்தையொட்டி, நந்தீஸ்வரர் மற்றும் மூலவர் மலர்களால் அலங்கரித்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
01-Sep-2024
09-Aug-2024