உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஸ்டுடியோவில் கேமராக்கள் திருட்டு

ஸ்டுடியோவில் கேமராக்கள் திருட்டு

திண்டிவனம்: திண்டிவனத்தில் ஸ்டுடியோவின் பூட்டை உடைத்து விலை உயர்ந்த கேமராக்களை திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திண்டிவனம் கிடங்கல் (2) ராஜன் வீதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் அரசு போக்குவரத்து கழக பணிமனை செல்லும் வழியில் போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளார். இவர், நேற்று முன்தினம் கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த இரண்டு டி.90 கேமராக்கள், கேனான் 5டி வீடியோ கேமரா திருடு போனது தெரியவந்தது.இதுகுறித்து ஆனந்த் கொடுத்த புகாரின் பேரில், திண்டிவனம் டவுன் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ