உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மொபைல் போன் வாங்கி தராததால் மாணவர் தற்கொலை

மொபைல் போன் வாங்கி தராததால் மாணவர் தற்கொலை

திண்டிவனம்: மொபைல் போன் வாங்கி தராதததால், பள்ளி மாணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் வெற்றிவேல், 16; வால்டர் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர், தன்னுடைய தந்தையிடம் ஆன்ட்ராய்டு மொபைல்போன் வாங்கி தரும்படி கேட்டுள்ளார். இதற்கு தந்தை மறுத்துள்ளார்.இதனால், மனமுடைந்த வெற்றிவேல், நேற்று முன்தினம் அவர்களுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மாட்டுக்கொட்டகையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.புகாரின் பேரில், ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை