உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாணவிகள் கிராமத்தில் தங்கி பயிற்சி; பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

மாணவிகள் கிராமத்தில் தங்கி பயிற்சி; பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

மரக்காணம் : திண்டிவனம் வேளாண்மை துறை அலுவலகத்தில் வேளாண் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. திருவண்ணாமலை அடுத்த வாழவச்சனுார் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதியாண்டு படிக்கும் 12 மாணவிகள் திண்டிவனம் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்கு திண்டிவனம் அடுத்த மானுார் வேளாண்மைதுறை அலுவலகம் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.வேளாண் மாணவ, மாணவிகள் இறுதியாண்டின் போது இரண்டு மாதங்கள் கிராமங்களில் தங்கி விவசாயிகளுடைய கள அனுபவத்தை தெரிந்து கொள்ளும் பொருட்டும், வேளாண்துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் நோக்கங்கள் குறித்து அறியும் வண்ணம் பயிற்சி பெறுகின்றனர்.மேலும் மாணவிகள் திண்டிவனத்தை சுற்றியுள்ள கிராமங்களில் பல்வேறு தொழில்நுட்பங்களை பரவலாக்கம் செய்தும், நீர் சிக்கனம், மழை முன்னறிவிப்பு, அசோலா உற்பத்தி, காட்டுப்பன்றிகளை விரட்டி, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு உள்ளிட்ட தலைப்புகளில் செயல் விளக்கம் அளித்தனர். பயிற்சியின் முடிவில் மரக்காணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன், திண்டிவனம் லயன் சர்வீஸ் டிரஸ்ட் தலைவர் ஸ்மையில் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.வட்டார தொழில்நுட்ப மேலாளர் நரசிம்மன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ