உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல் ..

குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல் ..

மயிலம்: மயிலம் வட்டார அரசு மருத்துவமனை சார்பில் தேசிய குடற்புழு ஒழிப்பு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி ரெட்டணை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.மயிலம் ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ராஜ்பாரத், ஊராட்சித் தலைவர் குமுதா முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் கலையரசன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மயிலம் வட்டார தலைமை மருத்துவர் தேன்மொழி குடற்புழு மாத்திரைகளை மாணவ, மாணவியருக்கு வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மயிலம் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் மணிமாறன், ரெட்டணை அரசு மருத்துவர் கலையரசி, மயிலம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரமணி, சுகாதார ஆய்வாளர் மோகனகிருஷ்ணன், நிர்வாகிகள் சேகர், பிரபு சுகாதார செவிலியர்கள், பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் பலராமன் நன்றி கூறினார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை