உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நெல் கொள்முதல் நிலையத்தில் நேர்முக உதவியாளர் ஆய்வு

நெல் கொள்முதல் நிலையத்தில் நேர்முக உதவியாளர் ஆய்வு

வானுார் : புதுக்குப்பம் கிராமத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஆய்வு செய்தார்.வானுார் தாலுகாவில் உள்ள புதுகுப்பம், பரங்கினி, உப்புவேலுார் கிராமங்களில் அறுவடை செய்யப்படும் நெல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் புதுக்குப்பம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.இந்த கொள்முதல் நிலையத்தில் கடந்த 20 நாட்களாகியும், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு பணம் பட்டுவாடா செய்யாததால் விவசாயிகள் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.அதனைத் தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பிரேமலதா நேற்று புதுக்குப்பம் நெல் கொள்முதல் நிலையத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.அப்போது சம்மபந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக பணம் பட்டுவாடா செய்ய அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது வானுார் வேளாண்மை உதவி இயக்குனர் எத்தி ராஜ், நுகர் பொருள் வணிபக் கழக மண்டல மேலாளர் மனோகர், முன்னோடி விவசாயிகள் ஏழுமலை உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை