உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நோயாளியிடம் மொபைல் போன் திருடிய வாலிபர் கைது

நோயாளியிடம் மொபைல் போன் திருடிய வாலிபர் கைது

திண்டிவனம் : திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தவரிடம் மொபைல்போன் திருடிய ஆசாமியை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 59; இவர் கடந்த 2ம் தேதி பிற்பகல் செஞ்சியிலிருந்து பைக்கில் திண்டிவனம் நோக்கி வந்து கொண்டிருந்தார். திண்டிவனம் அருகே வந்த போது, அந்த வழியாக வந்த தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த அடிபட்ட அவரை ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த போது, அவருடைய மொபைல்போனை யாரோ மர்ம நபர் திருடிச்சென்றுவிட்டார். பன்னீர்செல்வம் புகாரின் பேரில் ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் போனை திருடிய ஆசாமி யார் என்று தெரியவந்தது. பின்னர் மொபைல்போன் சிக்னலை வைத்து, ரோஷணை போலீசார் திண்டிவனம் செஞ்சி ரோட்டை சேர்ந்த அர்ஜூனன், 19; என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை திண்டிவனம் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ