உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோரிமேடு முதல் மொரட்டாண்டி வரை சர்வீஸ் சாலை ஆக்கிரமிப்பு நகாய், டோல்கேட் நிர்வாகம் மெத்தனம்

கோரிமேடு முதல் மொரட்டாண்டி வரை சர்வீஸ் சாலை ஆக்கிரமிப்பு நகாய், டோல்கேட் நிர்வாகம் மெத்தனம்

வானுார்: புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில், கோரிமேடு முதல் மொரட்டாண்டி வரை உள்ள சர்வீஸ் சாலை, ஒர்க் ஷாப்பாக மாற்றி விட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச் சாலை முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திண்டிவனம், வேலுார் மட்டுமின்றி வெளி மாநிலத்தைச் சேர்ந்த வாகனங்களும் அதிகளவில் செல்கிறது.புறவழிச் சாலையில், கோரிமேடு எல்லை முதல் மொரட்டாண்டி வரை சர்வீஸ் சாலையில், ஏராளமான லாரி, பஸ் சர்வீஸ், வணிக நிறுவனங்கள், ஸ்பேர் பார்ட்ஸ் கடைகள், ஒர்க் ஷாப்புகள், ஓட்டல்கள் என வரிசையாக உள்ளன. இங்கு தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன.இது மட்டுமின்றி, இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்பகுதிக்கு வரும் வாகன ஓட்டிகள் பெரும்பாலும், சர்வீஸ் சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.இது போன்ற சூழ்நிலையில், சர்வீஸ் சாலையை பல நிறுவனங்கள், ஒர்க் ஷாப்பாகவும், லாரிகளை நிறுத்தி பார்க்கிங் பகுதியாகவும் மாற்றி விட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது.முக்கிய இடமான கோரிமேடு பகுதியில் லே-பை அமைக்காததால், லாரி, பஸ் டிரைவர்களும் இந்த சாலையில் வாகனங்களை நிறுத்தி ஓய்வெடுக்கின்றனர்.இதையெல்லாம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய டோல்கேட் நிர்வாகம், கண்டும் காணாமலும் அலட்சியமாக உள்ளனர். டோல்கேட் நிர்வாகம், தேசிய நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மெத்தன போக்கால் ஒவ்வொரு நாளும் விபத்துகள் நடந்தேறி வருகிறது. எனவே, சர்வீஸ் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ