உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மயங்கி விழுந்து வாலிபர் சாவு

மயங்கி விழுந்து வாலிபர் சாவு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே சாலையோரம் மயங்கி விழுந்து வாலிபர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விக்கிரவாண்டி அடுத்த பொன்னங்குப்பம் பள்ளத் தெருவை சேர்ந்தவர் பூபாலன், 32: செங்கல் அறுக்கும் கூலித் தொழிலாளி. இவர் நேற்று மாலை 6:00 மணிக்கு விக்கிரவாண்டி பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள பைபாஸ் நிழற்குடை ஓரமாக உள்ள பள்ளத்தில் இறந்து கிடந்தார்.தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் காத்தமுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பூபாலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை