| ADDED : ஜூலை 02, 2024 05:58 AM
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பா.ம.க., விற்கும் தி.மு.க.,விற்குமான தன்மான தேர்தல் என மாநிலத் தலைவர் அன்புமணி பேசினார்.விக்கிரவாண்டி தொகுதி காணை ஒன்றிய பகுதிகளில் பா.ம.க., மாநிலத் தலைவர் அன்புமணி பேசியதாவது.இந்த தேர்தல் நம் சொந்த மண்ணில் நடைபெறும் தேர்தலாகும். என் மண்ணில் என் மக்களிடம் ஓட்டுகேட்க வந்துள்ளேன். நம் கட்சியின் கூட்டத்திற்கு மக்கள் யாரும் பங்கேற்க கூடாது என தி.மு.க., அமைச்சர்கள் பணம் கொடுத்துள்ளார்.தி.மு.க., ஆட்சியின் சாதனை கள்ளச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சியில் 65 பேர் இறந்ததுதான்.நாம் எதற்காக போராடுகிறோம் கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு சமூக நீதிக்காக போராடுகிறோமே தவிர வேறு எதற்கும் இல்லை. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சட்டசபையில் முதல்வர் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். இதில் எவ்வளவு பெரிய வன்மம் இருக்கிறது. இந்தத் தேர்தல் பா.ம.க.,விற்கும் தி.மு.க.,விற்கான தன்மான தேர்தல். மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டளித்து வெற்றி பெறச் செய்தால் அடுத்த மாதத்திலேயே 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை முதல்வர் அறிவிப்பார்.இவ்வாறு அன்புமணி பேசினார்.பா.ம.க., கவுரவ தலைவர் மணி,தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் பாலு, மாவட்டத் தலைவர்கள் புகழேந்தி, தங்கஜோதி, தர்மபுரி மாவட்ட செயலாளர் அரசாங்கம், நிர்வாகிகள் வெங்கடேசன், பெரியம்மாள், நாகு, தமிழ்ச்செல்வி, அமுல், சக்திவேல் மாவட்ட அமைப்பாளர்கள் பழனிவேல், மணிமாறன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.