உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மயிலம் கல்லுாரியில் முப்பெரும் விழா

மயிலம் கல்லுாரியில் முப்பெரும் விழா

மயிலம் : மயிலம் கல்லுாரியில் முப்பெரும் விழா நடந்தது.மயிலம் கல்லுாரியில் இளங்கலை இறுதியாண்டு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பும், இந்த ஆண்டு புதிதாக கல்லுாரியில் சேர்ந்த மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சியும், கல்லுாரி வளாகத்தில் நடந்தது.விழாவிற்கு, மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கி ஆசி வழங்கினார்.கல்லுாரி செயலாளர் ராஜிவ்குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார்.நிகழ்ச்சியில் மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. உதவி பேராசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ