மேலும் செய்திகள்
நாளை மின்தடை
40 minutes ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
41 minutes ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
41 minutes ago
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
41 minutes ago
திண்டிவனம், : திண்டிவனத்தில் பாதாள சாக்கடை திட்டத்தில் நிலுவையிலுள்ள நிதியை வழங்க வேண்டும் என்று, நகராட்சி நிர்வாக துறை முதன்மை செயலாளரிடம், அ.தி.மு.க.,எம்.எல்.ஏ.,கோரிக்கை வைத்துள்ளார். திண்டிவனம் நகராட்சியில், ரூ.265 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகின்றது. இந்த பணிகள் குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பாதாள சாக்கடை திட்டத்திற்கான நிலுவை தொகை ரூ.60 கோடியை நகராட்சி சார்பில் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு வழங்கவில்லை. இதனால் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நிறைவு பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது .இதை தொடர்ந்து திண்டிவனம் எம்.எல்.ஏ.,சென்னையிலுள்ள நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு ஆகியோரை திண்டிவனம் எம்.எல்.ஏ.,அர்ஜூனன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார்.அதில், பாதாள சாக்கடை திட்டத்திற்கான நிலுவை தொகையை விடுவிக்க வேண்டும், திண்டிவனம் ஜாய்ஸ் பொன்னையா தெருவில் பாலம் அமைக்க வேண்டும், வடவாம் பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தில் 10 எம்.எல்.டி., தண்ணீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும், நகராட்சி திடக்கழிவு மேலாண்மைக்கு குப்பைகளை சேகரிக்க போதிய இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.இதற்கு நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளர், ஒரு வாரத்திற்குள் நிலுவையிலுள்ள அனைத்து தொகைகளை விடுவிக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக எம்.எல்.ஏ.,விடம் தெரிவித்தார்.
40 minutes ago
41 minutes ago
41 minutes ago
41 minutes ago