விழுப்புரம் மெட்வே மருத்துவமனையில் இரட்டை பச்சிளம் குழுந்தைக்கு சிகிச்சை
விழுப்புரம்,: விழுப்புரம் மெட்வே மருத்துவமனையில் உள்ள குறைமாத பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தில், ஆறரை மாதத்தில் பிறந்த இரட்டை பச்சிளம் குழந்தைகளுக்கு, சிகிச்சை அளித்து காப்பாற்றினர்.விழுப்புரத்தில் முதன்முறையாக, மெட்வே மருத்துவமனையில், சர்வதேச தரத்திலான NICU (பச்சிளம் மற்றும் குறைமாத பிறப்பு குழந்தைகளுக்கான) சிறப்பு சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா வேப்பூர் அடுத்த ஒரம்பூரைச் சேர்ந்த மணி என்பவரது மனைவி சுரேக்கா என்பவருக்கு, இரட்டை குழந்தைகள் கடந்த ஜூலை மாதம் பிறந்துள்ளது. ஆறரை மாதத்தில், குறைபிரசவமாக இரண்டு பச்சிளம் குழந்தைகளும், மிகவும் குறைந்த எடையில் (தலா ஒரு கிலோ எடை) பிறந்துள்ளது.இதனையடுத்து, விழுப்புரம் மெட்வே மருத்துவமனையின் NICU சிறப்பு மையத்தில் அந்த தாயும், குழந்தைகளும், கடந்த ஜூலை மாதம் 19ம் தேதி சேர்க்கப்பட்டனர். அங்கு மிக குறைந்த எடையில் உள்ள இரண்டு பச்சிளம் குழந்தைகளுக்கும் சிறப்பு மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளித்து காப்பாற்றப்பட்டனர். பச்சிளம் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்கள் சதீஷ்குமார், சசிகலா, மகப்பேறு மருத்துவர் எழிலரசி மற்றும் செவிலியர் குழுவினரால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, பச்சிளம் குழுந்தைகள் உடல் நலனை இயல்பு நிலைக்குகொண்டு வந்தனர். இதனையடுத்து, தாய், சேய்கள் ஆரோக்கியத்துடன், நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சிறப்பு மருத்துவக்குழுவினர் மற்றும் மருத்துவமனை மேலாளர் மணிபாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.