உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / த.வெ.க., மாநாடு அனுமதிக்கு தாமதம்; விளம்பரம் செய்வதில் நிர்வாகிகள் தீவிரம்

த.வெ.க., மாநாடு அனுமதிக்கு தாமதம்; விளம்பரம் செய்வதில் நிர்வாகிகள் தீவிரம்

விழுப்புரம் : த.வெ.க., முதல் மாநில மாநாட்டிற்கான இடத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை என்றாலும், கட்சி நிர்வாகிகள் விளம்பரம் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு நடத்துவதற்கு, விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் 85 ஏக்கர் அளவிலான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கோரி, மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.அனுமதி வழங்குவதில் போலீசார், போக்குவரத்து பிரச்னையை காரணம் காட்டி தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த சூழலில், விழுப்புரம் மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், த.வெ.க., மாநில மாநாட்டை பொதுமக்கள் மத்தியில் விளம்பரம் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.டிஜிட்டல் கட் அவுட்கள், சுவர் விளம்பரங்கள் மற்றும் சமூக வலைதளங்களிலும் தீவிரமாக விளம்பரம் செய்து வருகின்றனர். போலீசார் மாநாட்டிற்கு எப்போது வேண்டுமானாலும் அனுமதி வழங்கட்டும். த.வெ.க., முதல் மாநில மாநாடு நடிகர் விஜய்க்கு வெற்றிகரமாக அமைந்து விக்கிரவாண்டி சென்டிமென்ட் பகுதியாக மாற வேண்டும் என்ற வேகத்துடன், நிர்வாகிகள் சுவர் விளம்பரங்கள் செய்து பிரபலப்படுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ