விக்கிரவாண்டியில் ஒன்றிய கூட்டம்
விக்கிரவாண்டி: புதிதாக துவங்க உள்ள கஞ்சனுார் ஒன்றியத்திற்கு விக்கிரவாண்டி ஒன்றியத்திலிருந்து ஊராட்சிகளை பிரித்து ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.விக்கிரவாண்டி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த ஒன்றிய கூட்டத்திற்கு, சேர்மன் சங்கீதஅரசி ரவிதுரை தலைமை தாங்கினார். ஒன்றிய துணைச் சேர்மன் ஜீவிதா ரவி, பி.டி.ஓ., க்கள் சுபாஷ் சந்திரபோஸ், நாராயணன் முன்னிலை வகித்தனர். மேலாளர் டேவிட் குணசீலன் தீர்மானங்களை படித்தார்.ஒன்றிய பொறியாளர்கள் முருகன், குமரன், செந்தில் வடிவு, கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் புதிதாக துவங்க உள்ள கஞ்சனுார் ஒன்றியத்திற்கு விக்கிரவாண்டி ஒன்றியத்தில் உள்ள 51 ஊராட்சிகளிலிருந்து மேற்கு பகுதியிலுள்ள 18 ஊராட்சிகளை பிரித்து ஒதுக்கீடு செய்வது. ஊராட்சிகளை மக்கள் தொகை அடிப்படையில் 10 ஊராட்சிகளில் உள்ள துணை கிராமங்களை கூடுதலாக 10 புதிய ஊராட்சிகளை உருவாக்குவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.