உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

கண்டமங்கலம்: கண்டமங்கலம் அடுத்த பள்ளித்தென்னல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.முகாமிற்கு, ஊராட்சி தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் அமுதா தனஞ்செழியன், ஊராட்சி துணைத் தலைவர் கிரிஜா பரந்தாமன் முன்னிலை வகித்தனர். ஆரம்ப சுகாததார நிலைய மருத்துவர் கவுதம் வரவேற்றார்.முகாமை, கண்டமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ஆர்த்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் பொது அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேசன், பல் மருத்துவர் புஸ்திக் சிங் தலைமையிலான மருத்துவக் குழுவினர் நோயாளிகளை பரிசோதித்து ஆலோசனை வழங்கினர். பகுதி சுகாதார செவிலியர் இந்திரா திட்ட விளக்கவுரையாற்றினார். தலைமையாசிரியர் வைத்தியநாதன், முன்னாள் ஊராட்சி தலைவர் அப்பாஜி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை