உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 4 நாள்கள் மதுக்கடைகள் மூடல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 4 நாள்கள் மதுக்கடைகள் மூடல்

விழுப்புரம், : விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலையொட்டி, 4 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படுகிறது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் 10ம் தேதி நடக்கிறது. அதனையொட்டி, வரும் 8ம் தேதி காலை 10:00 மணி முதல் 10ம் தேதி நள்ளிரவு 12:00 மணி வரை அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் இயங்காது. மற்றும் ஓட்டு எண்ணிக்கை தினமான 13ம் தேதி அன்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் இயங்காது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை