உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் எல்லை பாதுகாப்பு படையினர் சோதனை

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் எல்லை பாதுகாப்பு படையினர் சோதனை

விழுப்புரம் : விக்கிரவாண்டி தொகுதிக்குள் சென்ற கார், லாரி உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி, போலீசார் சோதனை செய்தனர்.விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நாளை 10ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, நேற்று 8ம் தேதி மாலை 6::00 மணியுடன், பிரசாரம் நிறைவடைந்தது.மேலும், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் உள்ள தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், தங்கி பிரசாரம் மேற்கொண்ட வெளியூர் நபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் எவரும், தொகுதியில் தங்கிட அனுமதி கிடையாது என தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் அறிவித்திருந்தார்.அதன்படி, விக்கிரவாண்டி தொகுதி எல்லை பகுதிகளில், சோதனைச் சாவடி அமைத்து எல்லை பாதுகாப்பு படையின் துப்பாக்கி ஏந்திய போலீசார், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.இவர்களுடன் உள்ளூர் போலீசாரும் இணைந்து விக்கிரவாண்டி தொகுதிக்குள் சென்ற கார், லாரி உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி, சோதனை செய்தனர்.விழுப்புரம்- செஞ்சி சாலையில் பூத்தமேடு பகுதியில், அமைக்கப்பட்ட போலீஸ் சோதனை சாவடியில், நேற்று காலை முதல், அந்த வழியே சென்ற வாகனங்களை நிறுத்தி, சோதனை மேற்கொண் டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை