உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாலை வசதி கோரி கிராம மக்கள் மனு

சாலை வசதி கோரி கிராம மக்கள் மனு

விழுப்புரம்: ஏப்பாக்கம் மேட்டு காலனி பொதுமக்கள், சாலை வசதி கோரி மனு அளித்தனர்.இதுகுறித்து திண்டிவனம் சப்-கலெக்டர் திவ்யான்சு நிகாமிடம் பொதுமக்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அளித்த மனுவில், 'திண்டிவனம் அடுத்த ஏப்பாக்கம் மேட்டு காலனியில் போதிய சாலை வசதியில்லாததால் வேலைக்கு செல்வோர், பள்ளி மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென' கூறப்பட்டிருந்தது. சங்க முன்னாள் மாவட்ட தலைவர் கண்ணதாசன், வட்ட செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் பாரதி, கிளை தலைவர் கோகுல்ராஜ், செயலாளர் ஆகாஷ் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை