உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் துவங்கியது

விழுப்புரம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் துவங்கியது

விழுப்புரம்: விழுப்புரம் அண்ணா அரசு கலை கல்லுாரியில், மாணவர் சேர்க்கை நேற்று துவங்கியது. முதல் நாளில், சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை நடந்தது.விழுப்புரம் அண்ணா அரசு கலை கல்லுாரில், வரும் கல்வியாண்டிற்கான (2024-25) மாணவர் சேர்க்கை நேற்று துவங்கியது. கல்லுாரியில் மொத்தமுள்ள 13 இளங்கலை, அறிவியல் பிரிவு படிப்புகளுக்கு 1,990 சேர்க்கை இடங்கள் உள்ளன. இதற்கு, 19,167 விண்ணப்பங்கள் வந்து குவிந்தன.முதற்கட்டமாக சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவுகளை சேர்ந்த விளையாட்டு பிரிவு, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் படை ஆகிய முன்னுரிமை பிரிவு மாணவர்கக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது.இந்த முதல்கட்ட கலந்தாய்வு, விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளி தற்காலிக சேர்க்கை மையத்தில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தலைமையில் பேராசிரியர்கள் கனகசபாபதி, பூபதி, சதிஷ்குமார், கார்த்திகேயன் உள்ளிட்ட சேர்க்கை குழுவினர் முன்னிலையில் கவுன்சிலிங் நடந்தது. பெற்றோர்களுடன், ஏராளமான மாணவர்கள் திரண்டிருந்தனர்.இந்த கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களிடம், சான்றிதழ்கள் மற்றும் முன்னுரிமை ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு சேர்க்கை நடந்தது. விளையாட்டு பிரிவில் 59, முன்னாள் ராணுவத்தினர் 6, மாற்றுத்திறனாளிகள் 3, என்.சி.சி., பிரிவில் 1 என விதிகள் படி சேர்க்கை நடந்தது. கவுன்சிலிங்கில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. இதனையடுத்து, வரும் ஜூன் 10ம் தேதி தொடங்கி ஜூன் 15ம் தேதி வரை பொது பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு, விழுப்புரம் அரசு கலை அறிவியல் கல்லுாரி மையத்தில் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை