உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஜூடோவில் வெண்கலம் அசத்தும் விழுப்புரம் மாணவர்

ஜூடோவில் வெண்கலம் அசத்தும் விழுப்புரம் மாணவர்

விழுப்புரம்: மாநில அளவிலான ஜூடோ போட்டியில், விழுப்புரம் மாணவர் வெண்கலம் வென்று சாதனை படைத்தார்.விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர் லோகேஷ், 13; கப்பியாம்புலியூர் சிகா மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். ஜூடோ போட்டியில் சாதித்து வரும் இவர், சென்னையில் ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வி பயிற்சி கல்லுாரி சார்பில், கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்த மாநில அளவிலான ஜூடோ போட்டியில் பங்கேற்றார்.பக் மெமோரியல் விளையாட்டு திருவிழாவையொட்டி நடைபெற்ற இப்போட்டியில், மூன்றாம் பரிசு பெற்று, வெண்கல பதக்கம் வென்றார். இவருக்கு சோழா ஜூடோ கிளப் பயிற்சியாளர் சென்சாய் குணசேகரன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை