உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விநாயகர் சதுர்த்தி விழா விழுப்புரத்தில் கோலாகலம்

விநாயகர் சதுர்த்தி விழா விழுப்புரத்தில் கோலாகலம்

விழுப்புரம்: நாயகர் சதுர்த்தியை யொட்டி, விழுப்புரத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.விழுப்புரம் ரயிலடி செல்வ விநாயகர் கோவிலில், நேற்று காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து விநாயகருக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதே போல், கிழக்கு சண்முகபுரம் காலனியில் ராஜகணபதி கோவிலில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காமராஜர் வீதியில் உள்ள அமராவதி விநாயகர் கோவிலில், சுவாமி சந்தனக்காப்பு அலங்காரத்திலும், கே.கே., நகர் விநாயகர் கோவிலில் மூலவர் வெள்ளிக் கவசத்திலும் பக்ர்தகளுக்கு அருள்பாலித்தனர்.பழைய பஸ் நிலையம் சக்தி விநாயகர் கோவிலிலும், ரங்கநாதன் ரோடு சித்தி விநாயகர் கோவில், அரசமங்கலம் விநாயகர் கோவில் உள்பட விழுப்புரத்தில் உள்ள பல்வேறு விநாயகர் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ