மேலும் செய்திகள்
வணிகவியல் மாணவர்களுக்கு வரவேற்பு
31-Aug-2024
வானுார் : வானுார் அரசு கலை கல்லுாரியில் வணிகவியல் துறை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட மயிலம் ரோட்டில் வானுார் அரசு கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லுாரியில் வணிகவியல் துறையில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கு, இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சார்பில், வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்திருந்தனர்.நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கி, வணிகவியல் துறை பாடத்தின் முக்கியத்துவம், வேலை வாய்ப்பு, உயர்கல்வி குறித்து எடுத்துரைத்தார். துறைத்தலைவர் தேவநாதன் நோக்கவுரையாற்றினார். நிகழ்ச்சியையொட்டி, மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பேராசிரியர்கள் குணசேகரி, ஆல்பர்ட் பிரபாகரன், ஜெயபால், தமிழரசன், பிரதாப் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாணவி சுபிக் ஷா நன்றி கூறினார்.
31-Aug-2024