உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கல்

நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கல்

செஞ்சி: செஞ்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மாவட்ட அலுவலர் தமிழரசன் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி சேர்மன் மொக்தியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிற்படுத்தப்பட்டோர் விடுதி காப்பாளர் சங்கர் வரவேற்றார்.அமைச்சர் மஸ்தான் 15 பேருக்கு 82 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பில் தையல் இயந்திரங்களை வழங்கினார்.பேரூராட்சி உறுப்பினர்கள் ஜான் பாஷா, பொன்னம்பலம், தொண்டரணி பாஷா, முன்னாள் ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.கண்காணிப்பாளர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை