உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ய முயன்ற பெண் கைது

கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ய முயன்ற பெண் கைது

விழுப்புரம்: விழுப்புரம் கோர்ட்டில் வேலை வாங்கித் தருவதாக, மோசடியில் ஈடுபட முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.விக்கிரவாண்டி அடுத்த சிறுவாலை கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யா, 30; பூக்கடை வைத்துள்ளார். அவரது மனைவி சந்தியா, 25; இவர், ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார். இவர்களது உறவினரான, திண்டிவனத்தைச் சேர்ந்த அஞ்சலாட்சி என்பவர் மூலம், சிங்கனுார் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான ஏழுமலை மகள் நதியா, 35; அறிமுகமாகியுள்ளார்.நதியா, தான் விழுப்புரம் கோர்ட்டில் பணிபுரிவதாகவும், அதனால், சந்தியாவிற்கு கோர்ட்டில் உதவியாளர் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்காக 3 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார்.கடந்த 18ம் தேதி, சூர்யா, சந்தியா ஆகியோர் பணத்துடன் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே வந்துள்ளனர். அப்போது, பணத்தை வாங்குவதற்காக வந்த நதியாவிடம் பேசிய, சந்தியாவும் அவரது கணவர் சூர்யாவும், பணத்தை தருகிறோம். ஆனால், எங்களை நேரில் அழைத்துச் சென்று காட்டுங்கள் என கேட்டுள்ளனர்.அப்போது நதியா, தான் எங்கும் வேலை செய்யவில்லை, பொய் சொல்லி ஏமாற்ற முயன்றதை அவர்களிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.இதுகுறித்து, சூர்யா கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் நதியா மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ