மேலும் செய்திகள்
ராமநாதபுரத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டங்கள்
09-Mar-2025
செஞ்சி: சங்கீதமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மகளிர் தின விழா நடந்தது.அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் மற்றும் உத்ரா அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவிற்கு, ரோட்டரி சமுதாய குழுமம் முன்னாள் தலைவர் ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஜோசப் எட்வின் முன்னிலை வகித்தார்.சினிமா இயக்குனர் ஹரி, உத்ரா கல்வியில் சிறந்த மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். ஆசிரியர்கள் கிறிஸ்து ராஜா, தாட்சாயினி, நடிகர் சேட்டு, ஒளிப்பதிவாளர் கிறிஸ்டோபர் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர்.இதேபோன்று, வல்லம் வட்டார வளமையத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் நடந்த விழாவிற்கு, பி.டி.ஓ., உதயகுமார் தலைமையில் கேக் வெட்டி வழங்கினர். வாழ்ந்து காட்டுவோம் வட்டார தலைவர் பிரகாசமணி முன்னிலை வகித்தார். அரசி ரமேஷ் வாழ்த்திப் பேசினார். 66 ஊராட்சிகளை சேர்ந்த தொழில் சார் சமூக வல்லுநர்கள், வாழ்ந்து காட்டுவோம் பணியாளர்கள் பங்கேற்றனர்.
09-Mar-2025