உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற வாலிபர் சங்க நிர்வாகிகள் கைது...

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற வாலிபர் சங்க நிர்வாகிகள் கைது...

விழுப்புரம்: கள்ளச்சாராயத்தை ஒழிக்க கோரி, விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கள்ளச்சாராய சாவுக்கு கண்டனம் தெரிவித்தும், கள்ளச்சாராயத்தை ஒழிப்பதோடு, மரணத்திற்கு காரணமான அனைவரையும் கைது செய்யக்கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.இதையொட்டி, காலை 10:00 மணிக்கு சங்க நிர்வாகிகள் மாவட்டத் தலைவர் பிரகாஷ் தலைமையில் கலெக்டர் பெருந்திட்ட வளாகம் எதிரே திரண்டனர்.அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த விழுப்புரம் அவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது, ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.தொடர்ந்து, சங்க நிர்வாகிகள் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ