உள்ளூர் செய்திகள்

வாலிபர் தற்கொலை

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த பனங் குப்பத்தைச் சேர்ந்தவர் ஞானவேல் மகன் சுஜித், 18; பிளஸ் 2 படித்துள்ளார். இவர், அல்சர் நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று வயிற்று வலியால் அவதியடைந்தார். மனமுடைந்த அவர், வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !