உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தொழில்நுட்ப பணிகள் தேர்வு 1,027 பேர் ஆப்சென்ட்

தொழில்நுட்ப பணிகள் தேர்வு 1,027 பேர் ஆப்சென்ட்

விழுப்புரம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் கொள்குறி வகை தேர்வு நேற்று நடைபெற்றது. விழுப்புரத்தில் அரசு கலை கல்லுாரி, அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளி, வி.ஆர்.பி., மேல்நிலை பள்ளி, சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வு எழுதுவதற்கு 3 ஆயிரம் பேருக்கு ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. காலை 9:30 மணி முதல் பகல் 12:30 வரை நடந்த தேர்வை 1,973 பேர் எழுதினர். 1,027 பேர் ஆப்சென்ட் ஆகினர். தேர்வு மையங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். வெளியூர் தேர்வர்கள், மையங்களுக்கு செல்ல இலவச பஸ் வசதிகள் மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை