உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அம்மன் கோவிலில் 108 பால்குடம் ஊர்வலம்

அம்மன் கோவிலில் 108 பால்குடம் ஊர்வலம்

செஞ்சி : ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் சாகை வார்த்தல் திருவிழாவில் பால்குடம் ஊர்வலம் நடந்தது. செஞ்சி அடுத்த காரை ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் 5 நாள் சாகை வார்த்தல் திருவிழா நேற்று துவங்கியது.இதை முன்னிட்டு காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் காப்பு கட்டுதலும், கொடியேற்றமும் நடந்தது.தொடர்ந்து 108 பெண்கள் ஊர்வலமாக பால்குடங்களை, எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். மாலை திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். நாளை 3 வது நாள் விழாவாக பூங்கரகம் ஊர்வலமும், சாகை வார்த்தலும், இரவு அம்மன் வீதி உலாவும் நடக்க உள்ளது.5ம் நாள் விழாவாக 24ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ