உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காவல் துறை பயிற்சி நிறைவு செய்த துணை தாசில்தார்கள் 16 பேர் நியமனம்

காவல் துறை பயிற்சி நிறைவு செய்த துணை தாசில்தார்கள் 16 பேர் நியமனம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் காவல் துறை பயிற்சி நிறைவு செய்த துணை தாசில்தார்கள் 16 பேர் கலந்தாய்வு மூலம் பணியிடங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய் அலகில், காவல் துறை பயிற்சி நிறைவு செய்த துணை தாசில்தார்கள் 16 பேருக்கான பணியிட நியமன கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. இதில், காவல் துறை பயிற்சி முடித்த துணை தாசில்தார்கள் சார்லின் வானுார் தாசில்தார் அலுவலக மண்டல துணை தாசில்தாராகவும், லோகநாயகி விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எப்., பிரிவு தலைமை உதவியாளராகவும், மணிகண்டன் திண்டிவனம் தாசில்தார் அலுவலகம் எண்.2, மண்டல துணை தாசில்தாராகவும், வெங்கடேசன் கண்டாச்சிபுரம் மண்டல துணை தாசில்தாராகவும், அம்பிகா விழுப்புரம் கலெக்டர் அலுவலகம், எச் பிரிவு தேர்தல் துணை தாசில்தாராகவும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.துணை தாசில்தார் ராஜேஷ் விக்கிரவாண்டி வட்ட வழங்கல் அலுவலராகவும், மலர் திண்டிவனம் வட்ட வழங்கல் அலுவலராகவும், தரணி விழுப்புரம் கலெக்டர் அலுவலகம், இ பிரிவு தலைமை உதவியாளராகவும், உஷா கண்டாச்சிபுரம் வட்ட வழங்கல் அலுவலராகவும், உமா மகேஸ்வரி முண்டியம்பாக்கம் எஸ்.ஏ.எப்.எல்., வடிப்பக அலுவலகம், தனித்துணை தாசில்தாராகவும், குமரன் செஞ்சி வட்ட வழங்கல் அலுவலராகவும் பணியிடங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர்.மெகருன்னிசா மேல்மலையனுார் வட்ட வழங்கல் அலுவலராகவும், காமாட்சி விழுப்புரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கே பிரிவு, கண்காணிப்பாளராகவும், விஜயன் கலெக்டர் அலுவலகம் எச் பிரிவு தலைமை உதவியாளராகவும், வேல்முருகன் திருவெண்ணெய்நல்லுார் தேர்தல் துணை தாசில்தாராகவும், பரணி வானுார் தேர்தல் துணை தாசில்தாராக பணியிடங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் பழனி பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை