உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 2 கார்கள் மோதல்: 3 பேர் படுகாயம்

2 கார்கள் மோதல்: 3 பேர் படுகாயம்

வானுார் : ஆரோவில் அருகே 2 கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் 3 காயமடைந்தனர்.திண்டிவனம் மார்க்கத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி நேற்று பிற்பகல் 2:00 மணிக்கு, ஐ20 கார் சென்று கொண்டிருந்தது. காரை புதுச்சேரி, ராகவேந்திரா நகரைச் சேர்ந்த சதீஷ், 46; ஓட்டினார். காரில் ஒருவர் உடன் வந்தார்.இடையஞ்சாவடி குதிரைப்பண்ணை சாலை அருகே சென்றபோது, புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் நோக்கி வந்த ஸ்விப்ட் டிசயர் கார், திடீரென சாலையின் குறுக்கே வளைய முயன்றது. அப்போது, சதீஷ் ஓட்டிச்சென்ற கார், ஸ்விப்ட் காரின் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளானது.இதில் 2 கார்களும் சேதமடைந்தன. ஸ்விப்ட் காரில் இருந்த 2 பெண்கள் உட்பட மூவரும் காயமடைந்தனர். ஐ20 காரில் இருந்த சதீஷ் உட்பட 2 பேரும் காயமின்றி தப்பினர்.தகவலறிந்த ஆரோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ஆரோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை