2 மாஜி ஏ.டி.எஸ்.பி.,க்கள் அ.தி.மு.க.,வில் இணைவு
திண்டிவனம்: ஓய்வு பெற்ற இரண்டு ஏ.டி.எஸ்.பி.,க்கள் அ.தி.மு.க.,வில் இணைந்தனர். திண்டிவனத்தில் உள்ள விழுப்புரம் மாவட்ட செயலாளர் சண்முகம் முன்னிலையில், சமீபத்தில் ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி.,க்கள் சங்கர், வேலன் ஆகியோர் நேற்று காலை அ.தி.மு.க.,வில் இணைந்தனர். இதில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அர்ஜூனன், சக்கரபாணி, மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் கோலியனுார் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.