/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 2 அரசு உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்வு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
2 அரசு உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்வு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
விக்கிரவாண்டி, ; விக்கிரவாண்டி தொகுதியில் 2 அரசு உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2025-26ம் கல்வியாண்டில் 20 அரசு உயர்நிலைப் பள்ளிகளை, மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார். இதில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில், காணை ஒன்றியத்தைச் சேர்ந்த கஞ்சனுார் மற்றும் மேல் காரணை அரசுஉயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.