உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 2 போக்சோ வழக்கில் ஒருவர் கைது செஞ்சி மகளிர் போலீஸ் அதிரடி

2 போக்சோ வழக்கில் ஒருவர் கைது செஞ்சி மகளிர் போலீஸ் அதிரடி

செஞ்சி : பள்ளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.செஞ்சி அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டு செஞ்சி அரசு மருத்துமனைக்கு அழைத்து வந்தனர். டாக்டர்கள் சோதனை செய்ததில் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.இது குறித்து சிறுமியிடம் பெற்றோர் விசாரித்ததில் காட்டுசித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த கார் டிரைவரான சரவணன் மகன் வினித்குமார், 23: பாலியல் பலாத்காரம் செய்தது தெரிவந்தது.இது குறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் வினித்குமார் மீது செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நேற்று முன்தினம் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

மேலும் ஒரு வழக்கு

விழுப்புரம் அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி. வெங்கந்துாரை சேர்ந்த தனது தாய் மாமன் மாரி, 24; என்பவரை காதலித்து 14 மாதங்களுக்கு முன் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். சிறுமி கர்ப்பமானதால் அவரை சில தினங்களுக்கு முன்பு முண்டியம்பாக்கம் அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். சிறுமி கர்ப்பமாக இருந்ததால் மருத்துமனை நிர்வாகத்தினர் விழுப்புரம் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து செஞ்சி அனைத்து மகளிர் போலீசார் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று மாரி மீது நேற்று முன்தினம் குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை