ஓட்டலில் சாப்பிட்டு பணம் தராமல் மிரட்டிய 2 பேர் கைது
மயிலம்:சென்னை, தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன் மகன் ஜீவாபிரகாஷ், 26; இதே பகுதியில் அன்னை தெரசா தெருவில் வசிக்கும் சேகர் மகன் நரேஷ் குமார், 25; இருவரும் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு கூட்டேரிப்பட்டில் தேசிய நெடுஞ்சாலையில் உமா சங்கர் என்பவருக்கு சொந்தமான ஓட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் உமா சங்கரை தாக்கி, கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். மேலும் ஓட்டலில் இருந்த பொருட்களை அடித்து உடைத்துள்ளனர். உமா சங்கர், 40; கொடுத்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர் .