மேலும் செய்திகள்
மதுபாட்டில் கடத்தியவர் கைது
27-Apr-2025
2 வீடுகளில் திருடிய வாலிபர் கைது
05-May-2025
விழுப்புரம்: விழுப்புரத்தில் பைக்குகளை திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் டவுன் போலீசார் நேற்று மாலை 6:00 மணிக்கு பானாம்பட்டு ரயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி விசாரணை செய்தனர். அதில் அவர்கள், விழுப்புரம், மோட்சகுளம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கிருஷ்ணா, 20; குமார் மகன் உதயபாரதி, 19; என்பதும், விழுப்புரம் நகரில் தொடர்ந்து பைக்குகளை திருடி வந்ததும் தெரியவந்தது.மேலும், அவர்கள் ஓட்டி வந்த பைக்கும் திருடி வந்ததை ஒப்புக் கொண்டனர். உடன், இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து 4 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
27-Apr-2025
05-May-2025